2025ம் ஆண்டு சிறுபோக பயிர்ச்செய்கைக்காக இரணைமடுக்குளத்தின் நீர் இன்று (3/3/2025) சமய வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக திறந்து விடப்பட்டது.

காலை 10.00 மணிக்கு சமய வழிபாடுகளைத் தொடர்ந்து 2025ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நீர் திறந்து விடப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயிர்ச்செய்கைக்குழு தீர்மானத்தின் படி 2025 சிறுபோகத்தில் 19164 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 382 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here