யாழ்ப்பாணம் – எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காரைநகர் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

எழுவைதீவு, அனலை தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றினை சோதனையிட்ட பொழுது கேரள கஞ்சா கைப்பற்றபட்டதுடன் கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

கைதான இருவரையும் ஊர்காவற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here