அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் நேற்று புதன்கிழமை (05/03/2025) மாலை தகவல் தெரிவித்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட இப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி சோதனையிட்டபோது அங்கு மரமொன்றில் தூக்கில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதனைக்கண்டு பொலிஸாருக்கு தலவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன்று வியாழக்கிழமை (3/6/2025) காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








