ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவரை தாம் அறிவதாகவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாகவும் பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (6) கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குப் பேசிய ஞானசார தேரர், இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிடப் போவதில்லை என்று வலியுறுத்தினார்.
“நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். மூளையாகச் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டேன். ஜனாதிபதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கும் நான் அறிவிப்பேன்,” என்று தேரர் கூறினார்.








