மட்டக்களப்பு – வெல்லாவெளி பாலையடிவட்டை பகுதியில் வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைதாகியுள்ளனர்.

இன்று அதிகாலை பாலையடிவட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர்.

அதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெடி பொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்கள் புதையல் தோண்டும் நோக்குடன் அந்த பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினர் அதில் பயணித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here