யாழ்ப்பாணம் பகுதியில் கணவன் தாக்கியதால் மன விரக்தியடைந்த மனைவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மனைவிக்கும் கணவருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (20/03/2025) முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார்.

இதனால் மனவிரக்தியடைந்த மனைவி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here