செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்து வரும் சீனா சில மாதங்களுக்கு முன் டீப் சீக் என்ற செயலியை உருவாக்கியது.
இந்நிலையில் சீன இராணுவ வைத்தியசாலைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவான டீப் சீக் செயலியை சீன இராணுவம் பயன்படுத்த தொடங்கி உள்ளது.
வைத்தியர்களுக்கான சிகிச்சைத் திட்டங்களைப் பரிந்துரைப்பது, மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற சிகிச்சை அல்லாத செயற்பாடுகளுக்கு டீப் சீக் செயலி பயன்படுத்தப்படுவதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது
இதேவேளை சீன இராணுவ ஆராய்ச்சி குழு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய இராணுவத் தளவாடங்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








