எத்திமலே காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை 05 அஞ்சல் பகுதியில் வத்தேகம தபால் நிலையம் நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி எத்திமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சடலம் எத்திமலே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எத்திமலே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here