இலங்கை சுங்கத்திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், உள்ளூர் பயணிகள் பலரால் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட ஏராளமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (06) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த பறிமுதல்களை மேற்கொண்டனர்.

துபாய் விமானங்களிலும், இந்தியாவிலிருந்து வந்த விமானத்திலும் பயணித்த பயணிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 1,843 அட்டைப் பெட்டிகளில் 368,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் 24 மில்லியன் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here