பொதுப் போக்குவரத்துப் பஸ்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான ஆசன முன்பதிவுகள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் விடுமுறை காலத்தில் தங்கள் பயணத் தேவைகளுக்காக பஸ்களை நம்பியிருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும், பஸ்கள் அவற்றின் பயணிகள் சேவை அனுமதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.

14 மணிநேர சேவையைத் தாண்டிய எந்தவொரு ஓட்டுநருக்கும் பதிலாக வேறொரு ஓட்டுநரை நியமிக்க வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here