வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், யாழ்ப்பாண வர்த்தகர்களை நேற்று (12/04/2025) சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளர்.

இந்த நிலையில் நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here