யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆதரவாளர்கள் இல்லாததால், பிரமுகர்கள் வெற்று கதிரைகளுக்கு உரையாற்றி இருந்தனர்.

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்தில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், வேட்பாளர்கள், தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டமானது மாலை 4 மணிக்கு ஆராம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டம் 5.30 மணியளவிலையே ஆரம்பமானது. அதனால் கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாட்டியவர்களின் உரைகளுடன் பெருமளவானவோர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்று இருந்தனர்.

அந்நிலையில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றும் போது பெருமளவானோர் கூட்டத்தில் இருந்து எழுந்து சென்ற நிலையில் வெற்று கதிரைகளுக்கே உரையாற்றி இருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here