அம்பாந்தோட்டை – தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்துள்ள நிலையில் நாக்குலுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குடாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஆவார்.
இது தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








