தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்டிருந்த விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








