உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை நியமிப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி புதிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கத் தகுதியுடையவர்கள் என தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு எடுத்த முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.







