ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) இடம்பெற்றுள்ளது.
பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒரு தரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும், இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதி செய்து விநியோகிக்குமாறும் தற்போதைய முகாமையாளரை இடமாற்ற கோரியும் கடந்த 14ஆம் திகதி ஆனையிறவுஉப்பளத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.








