பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 148 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 155 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை மாத்திரைகளுடன் 17  பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது 195 கிராம் 79 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 257 கிராம் 596 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 768  கிராம் 179 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 17 ஆயிரத்து 388 கஞ்சா செடிகளும், 295 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here