நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 18வது ஐ.பி.எல் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து முதல் முறையாக வெற்றிக்கோப்பையை கைப்பற்றியது.
இவ் வெற்றியானது வீரர்கள் மத்தியிலும் இரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்த வெற்றியை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியது,
”ஐ.பி.எல் கோப்பையே ! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்,சி,பி இரசிகர்களுக்கானது” என்று தெரிவித்துள்ளார்.







