இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிஷர்ட் மால்ஸ் (Richard Marles) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினை சந்தித்துள்ளார்.
இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 70 வருட பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் சமுத்திர பாதுகாப்பு, சட்டவிரோத வர்த்தகம், ஆள் கடத்தல்,பயங்கரவாதம் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றிகளை தெரிவித்துள்ளார் .








