மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளான்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10.00மணியளவில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் பிரபல ஆடையகமான சிங்கப்பூர் டெக்ஸ் உரிமையாளரான காத்தான்குடியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அவர்களின் மகன் என்று தெரிய வந்துள்ளது.
வேனும் மோட்டார்சைக்கிளும் ஆரையம்பதி 5ம் கட்டை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த வேன் என தெரிவிக்கப்படுகிறது.
21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(மட்டக்களப்பு நிருபர்-சோபிதன்)








