நேற்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது.
இது இந்தியாவில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும். லண்டனுக்குச் சென்ற விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர்.
இந்த விபத்தில் 11A இருக்கையில் பயணித்த ஒருவர் உயிர் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது.
12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் பிரஜைகள், 7 போர்த்துகீசிய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர்.
உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரஜை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.







