Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் – தீவக கடல் போக்குவரத்து தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் முன்னாயத்த கலந்துரையாடல் ..!

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்து தொடர்பாக, கடற்படை அதிகாரிகளுடன் முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.05.2025) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்...

7 ஆம் திகதி ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் வெற்றியை கொண்டாடுங்கள்- ஹரிணி அமரசூரிய..!

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, நாவலமுல்ல மற்றும் மாகம்மன ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இங்கு...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் ஊடகவியாலாளர்கள் போராட்டம்..!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக...

தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு தெரிவித்த ஆனந்தங்கரி ஒன்றிணையுமாறும் அழைப்பு ..!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 70 வருட அரசியல் அனுபவத்துடன் நான் இருக்கின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்டு பிழையான கருத்துக்கள் கூறப்பட்டு அரசியல் மோசடி செய்யப்பட்டது. பல சந்தர்பங்களில் MP ஆவதற்கும், ஏனைய பல வசதி...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று இறுதிப்பிரசார நடவடிக்கையில்..!

வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட அச்சுவேலி பத்தமேனிப்பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று இறுதிப்பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்தனர். உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலமையிலானோர் பத்தமேனிப்பகுதியில் இறுதிப்பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து இறுதி தேர்தல் பிரசார ...

தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்- வி.எஸ்.சிவகரன்..!

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  வாக்களியுங்கள் .அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும்.அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும்  சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம். தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும்...

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் கோர விபத்து- பலர் படுகாயம்..!

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில்  பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர்...

யாழில் இன்று கடற்றொழில் அமைச்சரின் ஊடக சந்திப்பு ..!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாண மக்கள் எமக்கு அமோகமான ஆதரவை தந்தார்கள். கடந்த தேர்தலை விட பாரிய வெற்றி இம்முறை கிடைக்கும். எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்த்து தமிழ் கட்சிகள் புலம்பி தற்போது ஊளையிடுகின்றார்கள். வேகமாக யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புகிறோம். தமிழ் மக்களுடைய தன்மானத்தை...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை- வெளியான மகிழ்ச்சியான செய்தி..!

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: நாகையில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை, பெப்ரவரி 22...

இரு நாட்டுக் கடல் எல்லைகளிலும் இந்தியா – பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை..!

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் கப்பல்களும், பாகிஸ்தானுக்குள் இந்தியக் கப்பல்களும் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியா இன்று (3) அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்துவதற்கும் இந்தியா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img