Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு விடுத்த அறிவித்தல்…!

ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. சமூக ஊடக தளங்களில் இருந்து இடுகையை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் பகிர்ந்தவர்கள் மீது...

ஜனாதிபதியின் திட்டம் முற்றாக வீழ்ச்சி…!

ஜனாதிபதி தேர்தலுக்காக 90 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரப் பிரிவு திட்டமிட்டிருந்த போதிலும், அத்திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, தற்போது 30 பேரணிகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் அவர் நடத்திய பேரணிகளின் எண்ணிக்கையும், மீதமுள்ள இலக்குகளை அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்ய முடியாத நிலையும் உள்ளது...

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் பலி…!

கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், அவர், கடந்த மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...

தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் கைது…!

காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (07.09) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் 3 தங்க பிஸ்கட் துண்டுகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் சென்னையிலிருந்து...

14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது…!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை (07.09) மாலை கைது  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களேகைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக்...

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08.09) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை வரை வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (06.09)...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக விஜயகலா யாழில் பிரச்சாரம்…!

சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் திருநெல்வேலிசந்தைப் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. திருநெல்வேலி சந்தை பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்று சனிக்கிழமை காலை துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் போது விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். நாடு...

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியாவில் பிரச்சாரம்…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வவுனியா நகரில் பிரச்சாரநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா தினச்சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேவேளை, குறித்த நடவடிக்கை நாடளாவிய...

அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும்; நல்லதம்பி சிறிக்காந்தா…!

தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணிமான நல்லதம்பி சிறிக்காந்தா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img