Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

4 ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று…!

மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் இன்று சனிக்கிழமை (07.09) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார...

உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு; உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாமவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் மனோதி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரான முன்னாள்...

தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை தீவிரம்…!

தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை அறிக்கைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள்  வடமராட்சி கிழக்கிலும் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று (06.09) பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்களிடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக...

மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது…!

மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முருங்கன்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (06.09)  நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறை மற்றும்  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும் குடும்பஸ்தர்கள்  என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ...

பாடசாலை மாணவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் மீட்பு…!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் T-56 ரக தோட்டாக்களை வைத்திருந்ததை அவதானித்த ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து, பாடசாலை அதிபர்...

வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்…!

நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (06.09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11,12,13, மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும்...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,460 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முாமைத்துவ நிலையத்திற்கு 1,530 கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3 மில்லியன் முட்டைகள்…!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40...

தனக்கு ஆதரவளிக்காதவர்களை பதவி விலகுமாறு அறிவித்த ஜனாதிபதி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காத அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமக்கு ஆதரவான பல கட்சி அமைப்புகள் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இக்கட்டான தருணத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத தனிநபர்கள் அரசாங்கத்தில்...

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது…!

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பல இடங்களுக்குச் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞனும், திருடப்பட்ட தங்க நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவை சேர்ந்த இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img