Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்…!

பாதுக்க, மஹிங்கல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் மற்றும் முச்சக்கர வண்டி என 3 வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைக்க முயற்சித்ததாகவும், அதற்குள் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏலத்தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய காணியில் உள்ள...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி…!

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06.09) இரவு இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வயலுக்கு சென்று கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில்...

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு…!

வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து  வெள்ளிக்கிழமை (06.09) உயிரிழந்துள்ளார். 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதுடன், இந்த பெண் அவரது வீட்டில் அறையொன்றில் தூக்கில்தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் கண்டுள்ளனர். பின்னர் இந்த விடயம் தொடர்பில்  ஈச்சங்குளம் பொலிஸாருக்கு  உறவினர்கள் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார்  சடலத்தினை மீட்டுள்ளனர். இந்த...

பொலிஸாருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு…!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து கிடைத்துள்ள தகவல் குறித்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதானநீதவான் திலிக கமகே முன்னிலையில் இது குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கண்டியில் வசிக்கும் முன்னாள்...

இன்றைய நாளுக்கான வானிலை…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு,...

கென்ய பாடசாலையில் தீ விபத்து..!

கென்ய பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யா, நைரி கௌண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்ப பாடசாலையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துகான காரணத்தைப் பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும்...

நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கம் – அனுரகுமார

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்தை கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். ஜாஎல தேர்தல் பிரச்சார கூட்டத்தில்இதனை தெரிவித்துள்ள அவர் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை நாட்டை  எவ்வாறு ஆட்சி செய்ய முடியும் என்பது தொடர்பில் மூன்று தெரிவுகள் உள்ளன  எனஅவர் தெரிவித்துள்ளார். எந்த வழிமுறையை நடைமுறைப்படுத்தினாலும் தேசிய...

எரிபொருள் இன்மையால் நிறுத்தப்பட்ட நாகைக்கும் காங்கேசன்துறை கப்பல் சேவை!

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை குறித்த கப்பல் வந்தடைந்தது. இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகை பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரானது. இந்நிலையில், பயணிகளும்...

யுக்திய நடவடிக்கை போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 736 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 736 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 05 பேரை புனர்வாழ்வு...

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேச சாணக்கியனுக்கு எந்த அருகதையும் இல்லை..!

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என தெரிவித்தார். வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம். வடமராட்சியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் பொது வேட்பாளரை சாணக்கியன் தேவையில்லாமல் விமர்சிக்க கூடாது....

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...
- Advertisement -spot_img