Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

மாணவர்களை தாக்கிய பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழு…!

மோட்டார் சைக்கிளை நிறுத்தாத காரணத்தினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரை களுத்துறை - பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த மாணவன் கடந்த 7ஆம் திகதி தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளதாகவும்...

பிபில – மஹியங்கனை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

பிபில - மஹியங்கனை பிரதான வீதியின் கல்வெட்டுக்கு அருகில் இன்று (11.08) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியயெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மரண வீடொன்றில் இரவு 11 மணியளவில் இருந்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, ஒருவர் காயமடைந்து...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை மோசமான நிலைக்குச் சென்றிருக்கும்; அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…!

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாதெனக் கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் எனத் தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன...

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினரின் தீர்மானம்..!

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய வேதனத்தை எழுத்து மூலமாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே எமது வாக்கு என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி சங்கத்தின் நிர்வாகச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த...

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் எழுந்துள்ள பிளவு…!

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் எழுந்துள்ள பிளவை தொடர்ந்து நாமல்ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சியினருக்கான ஆசனங்களில் அமர்வது குறித்து ஆராய்ந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாமல்ராஜபக்ச தலைமையிலான குழுவில் உள்ள பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர். எனினும் மகிந்த ராஜபக்ச இதனை நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரிசையிலேயே...

சஜித்திற்கு ஆதரவளிக்கும், எம்.பி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று (11.08) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இனமத நல்லிணக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் வலியுறுத்தி இளைஞன் நடைபயணம்!

இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும்  வகையிலும் யாழில்  இருந்து  இளைஞன்  ஒருவர்  நடைபயணம்  ஒன்றினை நேற்று மாலை ஆரம்பித்துள்ளார். சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே நேற்றைய தினம் யாழ்  நல்லூர் ஆலயத்தில்  இருந்து இந்த நடைபயணத்தை  ஆரம்பித்துள்ளார். இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார். அத்துடன் மாவட்டங்களின் முக்கிய...

பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சை..!

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. சாதாரண...

உருவாகும் புதிய அரசியல் கட்சி…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். தமக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு...

துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் மீட்பு…!

இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர். அண்மையில் மாகொல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்றிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகொல பிரதேசத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அண்மையில் 7 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img