Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் தீ…!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டதுடன் வெடிப்பும் ஏற்பட்டதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துறைமுக தீயணைப்புப் பிரிவு உட்பட துறைமுக ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தி அணைத்ததாகவும், தீயை அணைக்க முடியாவிட்டால் பெரும் அழிவை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தீயினால் கப்பலுக்கு ஏற்பட்ட...

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று (10.08) வரை 320 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணம் சென்றவர் கற்பாறை வீழ்ந்து பலி…!

அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு தவறுதலான பாதையினூடாக மலையேறி சென்றுகொண்டிருந்த நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர்...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் மூவர் கைது…!

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தைானவர்கள் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 - 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்கள் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை...

தீயில் எரிந்து நாசமான கார்…!

பெலியத்த குடாஹில்ல ஜய மாவத்தையில் ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் கார் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.08) அதிகாலை தீயில் எரிந்து நாசமானதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அதிகாரியின் வீட்டின் கெரேஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், காருக்கு யாராவது தீ வைத்திருக்கலாம் என...

யாழில் 20 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிய தொழிலதிபர்…!

நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம் யாழ்ப்பாணம் - கொடிகாமம், மிருசுவில் பகுதியில் ஒரு ஹோட்டலினை திறந்து வைத்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட, வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது; ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு…!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது யாரை ஆதரிப்பது...

வெள்ளோட்டத்திற்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்த சிவகங்கை பயணிகள் கப்பல்…!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

ஆசிரியையின் ஏ.ரி.எம். அட்டையை திருடிய சிவில் அதிகாரி…!

ஆசிரியை ஒருவரின் பணப்பையை திருடி அதிலிருந்த ஏ.ரி.எம். அட்டையை எடுத்து அதன்மூலம் 20ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் எடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹாஓயா சிவில் பாதுகாப்புப் படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடைய புதிய மெதகம, தியவிட்டகம பகுதியைச்...

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு – பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்!

"மீண்டும் ஊருக்கு போகலாம்" என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img