Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

களனி ஆற்றிலிருந்து இனம்தெரியாதவரின் சடலம் மீட்பு…!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தைக்கு அருகில் உள்ள களனி ஆற்றில் இருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் 5 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் எனவும்,  45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  பொலிஸார்...

அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்…!

விபத்தில் சிக்கி காயமடைந்த நபரொருவரை 1990 அம்பியூலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் அம்பியூலன்ஸில் இருந்த பெண் ஊழியர் ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான இராணுவ சிப்பாயின் சகோதரன் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து,...

மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்ற கிளினிக் நோயாளர்கள் அவதி…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ளச் சென்ற நோயாளர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள்  விசனம் தெரிவித்துள்ளனர். கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ள நேற்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் நோயாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கிளினிக் சேவையை...

தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து…!

எல்ல வெல்லவாய பிரதான வீதியின் ரந்தெனிய பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெல்லவாயவிலிருந்து  எல்ல நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று, வெல்லவாயவிலிருந்து ரந்தெனிய நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் இரு வாகனங்களும் பலத்த...

எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு..!

கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹர இன்றைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த காலப்...

இன்று எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு…!

இந்த ஆண்டுக்கான எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று சனிக்கிழமை (10.08) இரவு நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த முதலாவது எசல பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர், முதலாவது ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. பின்னர் இறுதி ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 19 ஆம்...

24 மணிநேரத்துள் 148 பேருக்கு டெங்கு பாதிப்பு..!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்துள் 148 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த 9 நாட்களுக்குள் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 33,795 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு...

மது போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்..!

மதுபான போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஸ்டிக்கர் முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி..!

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட...

இலங்கையில் முதலீட்டுக்கு அமெரிக்கா 24.5 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் நீண்ட கால முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் மேலும் 24.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய யு.எஸ்.எய்ட் அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதி நிர்வாகி மைக்கல் ஷிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது யு.எஸ்.எய்ட் அமைப்பின் இலங்கை மற்றும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img