Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

ஹபரணை – கந்தளாய் பகுதியில் லொறியுடன் யானை மோதி உயிரிழப்பு…!

ஹபரணை - கந்தளாய் பிரதான வீதியில், யானை ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் மோதி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 10 முதல் 15 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, லொறியின் சாரதி தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கித்துல்உதுவ  பொலிஸார் மற்றும்...

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி !

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடமாகக் குழுவாக இணைந்து தம்மைக் கடுமையாகத் துஷ்பிரயோகம் செய்ததாக தனமல்வில காவல் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக...

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 ஆண்டுகள் சிறை..!

டிப்பர் வாகனச் சாரதியிடம் 2,000 ரூபா இலஞ்சம் பெற்ற பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா 5,000 ரூபா அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட டிப்பர் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா...

கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு…!

அமெரிக்க பசிபிக் விமானப்படை, இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய 'Atlas Angel' எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது நிறைவடைந்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், மொன்டானா தேசிய காவலர் படையும் (Montana National Guard), அமெரிக்க பசிபிக்...

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன்று கோலாகலமாக ஆரம்பமாகியது..

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' நேற்று (09/08/2024) காலை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார். நேற்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினமும் காலை 10.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை இந்த புத்தகக்கண்காட்சியும் விற்பனையும்...

தமிழ் பொது வேட்பாளருக்கு சின்னத்தை வழங்க ஆதரவளிக்கும் கட்சிகள் மறுப்பு – சாணக்கியன்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள தமிழ் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னங்களை அவருக்கு வழங்க மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் நாளைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின்...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்..!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான   பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில்  முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை(9) காலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது. மன்னார்  மருதமடு அன்னையின்...

100 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது… !

வெள்ளவத்தை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரென்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள சீனா முதலிடத்தில் உள்ளது. இதன்படி, சீனா 32 தங்கம், 25 வெள்ளி மற்றும் 20 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 77 பதக்கங்களை பெற்றுள்ளது. அமெரிக்கா இதுவரையில் 30 தங்கம், 38 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 104 பதக்கங்களைப் பெற்று...

இலங்கை கைதி தமிழக சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்..!

தமிழகத்தின்  திருச்சி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதான இலங்கை கைதி ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் தப்பிச் சென்றிருந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டதையடுத்து நேற்றைய தினம் விசேட சோதனைநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்போது சிறைச்சாலையில் சில கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img