Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

தனியாருக்கு குறைந்த விலையில் நெல் விற்பனை! விவசாயிகள் கவலை..!

அரசாங்கம் உரிய நேரத்தில் நெல்லை கொள்வனவு செய்ய தவறுகின்ற நேரத்தில் அதனை பயன்படுத்தி தனியார் மிகக்குறைந்த நெல்லை கொள்வனவு செய்வதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் 340ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொண்ட நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில்...

சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகன விபத்தில் அரச சொத்துக்கு பாதிப்பு..!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் 23.06.2024 இன்று அதிகாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகனம் அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வளையமைப்புகள் பொருத்திய தூணில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் இரண்டு தொலைதொடர்பு தூண்கள் செய்ததுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வலைய அமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலைய அமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து...

தொடரின் முதல் தோல்வியை தழுவிய அவுஸ்திரேலியா..!

நடைபெற்றுவரும் இருபதுக்கிருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றின் எட்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்...

தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!

பொசன் போயாவை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் சென்றுள்ளனர். இதன் போது, ​​தம்புள்ளை பகுதியிலிருந்து...

பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!

அனுராதபுரம், பசவக்குளம் ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டோலுகந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்ஸா என்ற இளைஞனே இவ்...

பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்!சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் சுவாச நோய்கள்!

தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் சிறுவர்களிடையே அதிகமாக பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த...

இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்..!

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு...

தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் கைது..!

துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  சில பகுதிகளில்  75 மில்லிமீற்றர் வரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்  வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்  எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.  மத்திய...

கிளிநொச்சியில் பொசன் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது..!

2024 ஆம் ஆண்டு பொசன் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் 55 ஆவது காலாட்படை பிரிவின் பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபர், அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய படைபிரிவின் அனுசரணையுடன் பொசன் பொஹோ 21.06.2024 நேற்று இரவு கிளிநொச்சி 55 வது காலாட்படை பிரிவுக்கு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img