Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

மீண்டும் உயர்வடைந்த முட்டையின் விலை..!

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

இன்று அநுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் இந்தியப் பிரதமர்..!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11...

இன்றைய நாளுக்கான வானிலை..!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும்...

அரச மரியாதையுடன் சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடி..!

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அரச மரியாதை வழங்கும் நிகழ்வில் 19 துப்பாக்கி வேட்புக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான...

அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு..!

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது. அமெரிக்காவுடன் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது அண்மைய வாரங்களில்...

உயர்வை தொட்ட தங்கத்தின் விலை..!

இலங்கையில் கடந்த திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினம் (04) மேலும் அதிகரித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் அபாயங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள், பாரம்பரிய பாதுகாப்பான சொத்தான தங்கத்தின் விலையை உயர்த்துகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிக் கொள்கையால் ஏற்பட்ட பரந்த சந்தை விற்பனை தங்க...

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் – கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, விசேட வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கள, தமிழ்...

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது..!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (04) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும். தற்போது,...

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் காலமானார்..!

இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’, ‘பகலில் ஒரு இரவு’ படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார். 71 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவ மனையொன்றில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிறுமி-முள்ளம்பன்றி காணொளி இலங்கையை சேர்ந்தது!

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களின் மனதை கவர்ந்த சிறுமி ஒருவர் சிறிய முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் இதயத்தை தொடும் காணொளி, வங்கதேசத்தை சேர்ந்தது என...
- Advertisement -spot_img