Friday, May 1, 2026
No menu items!

Priya

சட்டத்தரணியொருவரின் வீட்டில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது..!

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி..!

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று (23.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது 2, 312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த...

கனடாவில் இலங்கையர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார். இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் 27 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவரின் மனைவி அயலவர்களிடம் உதவி கோரியதையடுத்து சம்பவ...

மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு..!

கேகாலை, மங்களகம பிரதேசத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில்  மூன்று நாட்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரன்,...

இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு – விமான சேவைகள் இரத்து..!

பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்சின் பல நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு இலட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சில் வரும் வாரங்களில் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவித்தல்..!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த...

பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை இலங்கை அதிகாரிகளுடன் எட்டியது IMF..!

நான்கு ஆண்டு நீடிக்கப்பட்ட நிதி வசதிக்கு வழி வகுத்து, அடுத்த தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அதிகாரிகளுடன் எட்டியுள்ளது. 4 வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வில் IMF குழு இலங்கை அதிகாரிகளுடன் பணியாளர் அளவிலான...

தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காணும் வகையில் குறுகிய காலத்திற்குள், தேங்காய்களைப் பெறக்கூடிய புதிய கலப்பின தென்னை இனங்களை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்புதிய செயற்திட்டத்தின் மூலம் 3 வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்தார். அண்மை காலமாக நாட்டில்...

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பில் வெளியான அறிவித்தல்..!

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.  இதன்படி, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் நாளை மறுதினம் (25.11.2024) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அஸ்வெசும நலன்புரி திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img