கேகாலை, மங்களகம பிரதேசத்தில் உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, மங்களகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில்  மூன்று நாட்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரன், காணாமல் போனவரை தேடி சென்ற போது ஆற்றுப் பகுதிக்கு அருகில் வைத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here