Friday, May 1, 2026
No menu items!

Priya

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்பிப்பு..!

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35இற்கும் மேற்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த இல்லங்களில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய இல்லங்கள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

காசாவிலுள்ள மருத்துவமனைமீது தாக்குதல் – 6 பேர் பலி..!

காசாவிலுள்ள மருத்துவமனைமீது இஸ்ரேல் ஆளில்லா விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  இந்த தாக்குதலில் 5 துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

குருணாகல், கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலகம்மில்லவ பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரியுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரியுல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குருணாகல், மீவெல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில்...

10 மாதங்களில் இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 73 பேர் கைது..!

கடந்த 10 மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 73 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு தலைமை பொலிஸ் ஆய்வாளர், இரண்டு பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், எட்டு பொலிஸ் அதிகாரிகள்  மற்றும் ஒன்பது சார்ஜென்ட்கள் உட்பட 21 பொலிஸ்...

நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு – கே.டி.லால்காந்த தெரிவிப்பு..!

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், நுகர்வோருக்கும், விசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சந்தையில் பாரிய அளவில் அரிச்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு, வெள்ளை, சிவப்பு உட்பட உள்நாட்டில் உற்பத்தி...

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது..!

காலி, அம்பலாங்கொடை பிரதேசத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பத்தேகம மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கச் சங்கிலிகள் மற்றும் பெண்டன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக்...

முட்டையின் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தற்போது சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 17 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் அறிவிப்பு..!

17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. இந்தநிலையில்...

பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்..!

125,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 27ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள்...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img