Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

இன்றைய நாளுக்கான வானிலை….

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுகின்றது என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல்...

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து…!

கொழும்பு, புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (05.10) இடம்பெற்றுள்ளதோடு,  அருகில் இருந்த மேலும்  இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை…!

நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் ஒன்றை பியூமி ஹன்சமாலி கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட...

போதைப்பொருள் கலந்த உணவுடன் சிறையிலுள்ள கணவனை பார்க்க சென்ற மனைவி…!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர்  அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்தியச் செயற் குழு என்பன கூடி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மாத்திரமே இந்த தீர்மானம்...

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் நியமனம்…

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்த பின்தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்…

மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணி…

வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை திருத்தல் போன்ற பணிகள் சங்கானை நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. மேற்பார்வையாளர் திரு.ரஜீவனின் மேற்பார்வையின் கீழ் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவால் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் கொழும்பு 07 இல் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (04.10) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அப்துல்லாஹ் மஹ்ரூப் அகில இலங்கை மக்கள்...

மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட 1690 துப்பாக்கிகள்…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவரது மகன் யோஷித ராஜபக்ச, 'எவன்ட்கார்ட்' உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1500 பேருக்கு 1690 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு 8 துப்பாக்கிகளும், நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img