Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணம்…!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க தேவையான...

முதலை தாக்கியதில் ஒருவர் பலி…!

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொரா ஓயாவை கடக்க சென்ற நபரை முதலை ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பதவி ஸ்ரீபுர, கமுனுபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய அறிஞர் ஆவார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

தானியங்களின் பற்றாக்குறை; விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்…!

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி.என். எம்.விக்ரமசிங்க எதிர்வரும் பெரும் போகத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார். மக்காச்சோளம், உளுந்து,பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் தேவைக்கே போதுமானதாக...

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு….!

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய சிக்கல்கள் இன்றி சிகிச்சைகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் என அவர் கூறினார். இதனிடையே, மருந்து பற்றாக்குறை தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம்...

வடக்கு ரயில் சேவை இடைநிறுத்தம்…!

வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியில் இருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில் சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பூரண திருத்த திட்டத்தின் கீழ் வடக்கு ரயில் பாதையை நிறுத்தி , கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10 மாதங்களாக திருத்த வேலைகள் இடம்பெற்று வந்தன. எனினும், தற்போது ரயில்...

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் ரணில்…!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எனினும் பொதுத் தேர்தலில் எரிவாயு...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது…!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

நேருக்கு நேர் மோதிய கார் மற்றும் டிப்பர்; ஒருவர் பலி…!

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த பெலியஅத்த வஹரக்கொட அலஹேன பகுதியைச் சேர்ந்த பாலமானகே ஆரியபால என்ற 72 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த...

170 ஓட்டங்களால் 7வது தர்மமுழக்கம் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது, தர்மபுரம் மத்திய கல்லூரி அணி…. 

தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய பாடசாலை களுக்கிடையிலான 7வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய இரண்டாவதும் இறுதி நாள்  போட்டியில் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முழங்காவில் மகா வித்தியாலய அணியை வீழ்த்தி...

அநுராதபுரம் வீதியில் விபத்து….!

பாதெனிய - அநுராதபுரம் வீதியில் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img