Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!

அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை  நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது. திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  சுற்றறிக்கை கீழே…

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில்  பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் நடவடிக்கை..!

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த பெண்..!!

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச்...

ஜப்பானின் வைத்திய குழுவினர் இலங்கைக்கு!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இம் மருத்துவக் குழுவினர் நேற்று (03) டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டிருந்தனர். ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பானிய சர்வதேச...

போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் கைது – பாணந்துறையில் சம்பவம்..!!

போலி அடையாள அட்டைகள் உட்பட போலி ஆவணங்களைத் தயாரித்த  நபர் ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை,கொரகபொல  பிரதேசத்தைச்  சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம்...

கமத்தொழில், கால்நடை, நீர்ப்பாசன துறை சேதங்கள் – இழப்பீடு ,மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கலந்துரையாடல்!!

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை பாதித்த சீரற்ற...

புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளிலும் பயணிக்க முடியும்..!!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தநிலை காரணமாக புகையிரத பாதைகள் சேதமடைந்துள்ளன. அதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், விவாதத்தின் பின்னர் இவ்வாறு மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

About Me

860 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img