Friday, June 26, 2026
No menu items!

Tamil Vani

பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி..!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...

அனர்த்தத்தினால் 156 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேதம்..!!

இயற்கை அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் பகுதி அல்லது முழுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 126 தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 30 நீர்...

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு..!!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474...

பேரிடரால் 95 வீதிகளுக்கு தடை..!!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. இந்த வீதிகளை சரி செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களுக்குள் நிறைவடையும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார். பேரிடர் நிலைமை காரணமாக மொத்தம் 256 வீதிகள் பாதிக்கப்பட்டிருந்தன....

அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!!

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை...

ஜனாதிபதி தலைமயில் அவசர அமைச்சரவைக் கூட்டம்..!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பைச் செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார விடுத்துள்ளார்.

தொலைபேசி–இணைய சேவைகள் சீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்..!!

சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமைக்குள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். சேவைகளை மீட்டெடுப்பதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மண்சரிவு மற்றும்...

அனர்த்தத்தினால் பலி யானோர் எண்ணிக்கை 465 ஆக அதிகரிப்பு; 31,000 வீடுகளுக்கு சேதம்..!!

​இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. பாதிப்புகள் குறித்த சமீபத்திய அறிக்கை: ​பாதிப்புக்குள்ளானோர்: 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் ​மோசமாகப் பாதிக்கப்பட்ட...

அனர்த்த உதவியாக இரண்டு கள மருத்துவமனைகள்-70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் படையினர் இலங்கையில்..!!

'டிட்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம்  நேற்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல்...

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கடுவெல – பத்தரமுல்ல வீதி..!!

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய  நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது. அதன்படி,...

About Me

860 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

அரச பணியாளர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை...
- Advertisement -spot_img