Saturday, June 27, 2026
No menu items!

Tamil Vani

ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் – டிரம்ப் உத்தரவு..!!

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. டிரம்பின் எச்சரிக்கையை மீறி...

வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இன்று (02) காலை இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இந்தப் பகுதிகளில்  சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும்...

தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி..!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின்...

பொது மக்கள் அவதானம் – கடுமையான மின்னல் எச்சரிக்கை..!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்...

எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்..!!

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய...

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் சொகுசு தொடருந்து சேவை..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express தொடருந்து, பிரதி...

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் கனிவான வெற்றி..!!

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தனது விரும்பிய இலக்குகளை அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரிகளை 20% ஆகக் குறைப்பது குறித்து இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களைப் போன்ற ஒரு கட்டண விகிதத்தை அடைவதே இந்தப்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் 567 நீதிமன்ற வழக்குகள் பதிவு..!!..!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த ஏழு மாதங்களில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தொழில் தேடுபவர்களை ஏமாற்றியதற்காகச் சந்தேக நபர்களிடமிருந்து ரூ.199.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை...

இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்திற்கு ”யாழ்ப்பாணம்நகரம்” எனப் பெயரிட்டப்பட்டுள்ளது..!!

இலங்கை ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) தனது ஏர்பஸ் A320-200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது. சமீபத்தில் தெற்காசியாவின் சிறந்த விமான சேவை என அங்கீகாரம் பெற்ற இந்த தேசிய விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாளப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல மேற்கு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img