Saturday, June 27, 2026
No menu items!

Tamil Vani

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – காலியில் சம்பவம்..!!

காலி - ஹுங்கம, பிங்கம பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹுங்கம காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்விச்சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் யாழ் விஜயம்!!!

கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமர்சூரிய தலைமையில் நடைபெற்றது. இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு...

ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்!!

காலி பிரதான வீதியில், வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையிலான பகுதியிலும், ஹெவ்லொக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரதபவனி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை எதிர்க்கும் தமிழரசுக் கட்சி!!

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தாங்கள் எதிர்ப்பதாக தமிழரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர்,  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய...

ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ள இலங்கை போக்குவரத்து சபை!!

இலங்கை போக்குவரத்து சபை ஊழல் நிறைந்த இடமாக மாறியுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது பிமல் ரத்நாயக்க இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் டிப்போவின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். இதற்கிடையில், பாதுகாப்பான மற்றும் தரமான...

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது!!

நாட்டின் பல கடற்கரைப் பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி முதல், 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, 5 விசைப்படகுகளும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காவல்துறையினருடன், கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பின்...

போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக சொத்துக்களை வாங்கிய பெண் கைது!!

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச்...

நேற்று இடம்பெற்ற வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் !!

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது...

யாழ்ப்பாணம் சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நாக விகாரையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம்...

செம்மணியில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள்..!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் வியாழக்கிழமை  புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 07 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 12 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 47 எலும்புக்கூட்டு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img