Saturday, June 27, 2026
No menu items!

Tamil Vani

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்வதனால் குறித்த பகுதிக்குள் கலணியுடன் உள்நுழைவதற்கு...

திருடப்பட்ட பல பொருட்களுடன் இருவர் கைது..!!

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். நேற்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுத்த விசாரணையின் போது, சந்தேக நபரின் வீட்டில் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத...

வவுனியாவில் இருவர் கைது..!!

வவுனியா - நெடுங்கேணி தண்டுவான் பகுதியில் சட்டவிரோதமாக வனப்பகுதியைத் துப்புரவு செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், மாங்குளம் வனவளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 23 மற்றும் 40 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்..!!

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு அரசாங்கம் என்ற வகையில், எந்தவொரு நபருக்கும் எதிராக, அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். குறைந்த எண்ணிக்கையிலான அரசு...

20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து..!!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துசெய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அல்லது மாதக்கொடுப்பனவுகள் ரத்துச்செய்யப்படவுள்ளன. அத்துடன் அவர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கான கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளும் ரத்தாகின்றன. அதேநேரம் அவர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் ரத்துசெய்யப்படும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை!

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பில் இது கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்...

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு..!!

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) அறிவுறுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட இணையக் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. எக்காரணம் கொண்டும் கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம்...

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!!

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு! தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன...

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை – வெளிவிவகார அமைச்சு!

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை முன்னிலைக் கொண்டு புத்தரின் அழியாத போதனைகளால் வழிநடத்தப்படும் ஒரு தேசமாக காணப்படும் இலங்கையானது, இரு நாடுகளும் பிரச்சினைகளை அமைதியாகத் தீர்க்க அவசர இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுமாறு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img