Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும், நாட்டு பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கியூ. ஆர் முறைமை ஏற்கனவே எரிபொருள் பயன்பாட்டை ஓரளவிற்குக் குறைத்திருந்தாலும், நாட்டில்...

15 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; பிக்கு கைது

பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தொடர்பாக கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையின் சகோதரரான சந்தேக நபர்,மே 20 அன்று காவலில் எடுக்கப்பட்டார் என காவல்துறையினர்...

தேர்தல் நிதி வேறு தேவைக்கு ஒதுக்கப்பட்டதா?; விசாரணை கோரியுள்ள மனோ!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரிக்குமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நாடாளுமன்றப் பொது நிதிக் குழுவிடம் (COPF) கோரிக்கை விடுத்துள்ளார். கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எழுதிய கடிதத்தில், மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட...

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்கு முன்னதாக இந்தத் திருத்தம்...

போதையில் வாகனம் செலுத்திய சாரதியால் அறுவர் உயிரிழப்பு

மீகொட சந்தி அருகே அமைக்கப்பட்ட வெசாக் தானசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்ததோடு ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மீகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஹை லெவல் வீதியில் , அவிஸ்ஸாவெல்லயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாடகைக் கார் ஒன்று தானசாலையில் வரிசையில்...

சாரதியை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குழு; ஒருவர் கைது

வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியைக் குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மே 29 அன்று கொழும்பின் வெலிக்கடை பகுதியில் இடம்பெற்றதோடு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட குறித்த காணொளியில், ஒரு நபர் வாடகைக்கார் சாரதியை அச்சுறுத்தி கொள்ளையடிக்க...

முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

எரிபொருள் விலை நேற்று 30 நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மீட்டர்ருக்கான முதல் கி.மீ கட்டணத்தை 130 ரூபாவாக அதிகரிக்கும் முன்மொழிவை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் குழுவிடம் அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளதாக...

கிழக்கு மாகாண நன்னீர் மீன்பிடிக்காக ஜப்பான் 436 மில்லியன் ரூபாய் உதவி!

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்திற்காக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழிநுட்ப அனுசரணை மற்றும் ஜப்பானின் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) அபிவிருத்தி திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளன. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்கள் மீண்டு வருவதை உறுதிப்படுத்துதல் மீன் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய...

காணாமல் போன மாணவர்கள் சடலமாக மீட்பு!

அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின் உடல்கள் இன்று காலை (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர், அவர்களில் 18 மற்றும் 12 வயதுடைய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,...

ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு;பொலிசார் விசாரணை

வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே நேற்று சனிக்கிழமை (30) மாலையில் ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவு எல்லைக்குள், பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. சம்பவத்தின் போது உயிரிழந்த பெண், வெள்ளை மற்றும் பழுப்பு நிற புடவை அணிந்து, பச்சை...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...