Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று(30) நள்ளிரவு முதல் சகல எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் லங்கா வொயிட் டீசலின் விலை ரூ. 15 அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 407 ஆக உள்ளது. ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலையை 20 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...

கலமெட்டிய கடல் பகுதியில் மூழ்கி மாணவர்கள் மூவர் மாயம்

அம்பாந்தோட்டை,ஹுங்கம, கலமெட்டிய கடல் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த மாணவர்கள் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என கூறப்படுகிறது. தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை மீட்பு பணியாளர்கள் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத உதிரிபாகங்களைக் கொண்டு வாகனம் தயாரித்தவர் கைது!

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (29) இரவு, மேல் மாகாணத்தின் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கொட்டாவ பொலிஸ் பகுதியில் நடத்திய சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக...

முதலீட்டாளர்களை வரவேற்கும் அரச தோட்டங்கள்!

பயன்படுத்தப்படாத அரச தோட்ட நிலங்களையும் சொத்துக்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, செயலற்றுக்கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுதல், பிராந்தியப் பொருளாதாரங்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் தோட்டங்களை நவீனமயமாக்குதல் போன்ற நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தோட்டப் பண்ணைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், கட்டிடங்கள் (பங்களா),விவசாய-சுற்றுலா...

எரிபொருள் விலை குறைக்கப்படுமா?; பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கருத்து

எரிபொருள் விலை திருத்தத்தின் போது நாட்டில் எரிபொருள் விலையில் குறைப்பை எதிர்பார்க்க இயலாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், உலகளாவிய எண்ணெய் விலை மார்ச்/ஏப்ரல் மாதத்தை விட சற்று குறைவாக காணப்படுகின்ற போதும் சமீபத்திய மத்திய கிழக்கு மோதலுக்கு முன்னர் காணப்பட்ட விலையை...

மே மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டேன் (CCPI) மூலம் வருதத்தின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 மே மாதத்தில் 5.5% ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% என்ற அளவிலிருந்து இது ஒரு அதிகரிப்பாகும் என மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே , உணவுப் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில்...

26.7 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, ​​26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு , கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (28) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற கால்நடைத் திருட்டுச் சம்பவங்களுடனும் இந்த சந்தேக நபர்களுக்குத்...

மூவாயிரம் கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மீட்பு!

தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் 3.362 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும், இந்த போதைப்பொருள் பதுக்கலுக்குப் பொறுப்பான நபர்கள் தற்பொழுது வரையில் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களைக்...

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ராஜினாமா

பேராசிரியர் கபில பெரேரா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் அடிப்படை உரிமைகளை அவர் மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் பதவி விளக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தெரியவருவதாவது, பேராசிரியர் கபில பெரேரா, சத்யானந்தாவை அமைச்சின் மேலதிக செயலாளராக நியமித்துள்ளார். எனினும் அவர் பதவியேற்ற முதல்...

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 464 வெசாக் தானசாலைகள் பதிவு!

கொழும்பு மாநகர சபை (CMC) எல்லைக்குள் இதுவரையில் 464 வெசாக் தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார ஆய்வாளர் தெஹான் விதானகே தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்பட்ட தானசாலைகளில், 91 இடங்களில் பிரதான உணவு (அரிசி சோறு) வழங்கப்படவுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தொற்றுநோயியல் பிரிவால் வெளியிடப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பதிவுப் பணிகள்...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...