Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இந்த சம்பவத்த்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஐம்பத்தொரு (51) நபர்கள் மீட்கப்பட்டதாகவும், ஏழு (07) பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்,...

695 மில்லியன் டொலர்களை விடுவித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் திறைசேரி இன்று சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார். இலங்கையின் கடன் திட்டத்தின் 5வது மற்றும் 6வது மறுஆய்வுகளுக்கு பின்னர் மே 27 அன்று சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்த நிலையில் இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைய இத்திட்டத்தின் கீழ்...

வெசாக் விளக்கு சேதம்; யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவர் ஒன்றியம் கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியம் (MCSU), தமது வணிக பீடத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது வெசாக் விளக்கு சேதப்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்றியம், இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த...

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று காலை (03) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, குறைந்தது 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய-நோனாகம வீதியில் உள்ள சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் போது தீக்காயங்கள் மற்றும்...

ஒரு மாணவரும் இல்லாத இலங்கையின் வசதி படைத்த பாடசாலை

மொனராகலை கல்வி வலயத்தில் உள்ள படல்கும்புர, எத்பட்டிய பாடசாலை, இலங்கையில் மாணவர்கள் இல்லாத ஒரே பாடசாலையாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர், மற்றும் மாணவர்கள் இல்லாத இந்த பாடசாலையில், ஆசிரியர் ஒருவரும் ஒரு கல்விசாரா பணியாளரும் பணியாற்றி வருகின்றனர். 1948-ல் 70 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பாடசாலை 200 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்களைக் கொண்ட பணியாளர்...

அமெரிக்காவால் பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் அன்பளிப்பு

அமெரிக்காவால் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் நாட்டில் தரையிறங்கியுள்ளன. தற்போது குறித்த ஹெலிகொப்டர்கள் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளத்தில், முறைப்படியான பயன்பாட்டிற்கு முன்னரான பரிசோதனைகள் மற்றும் சோதனைப் பறப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. குறித்த ஹெலிகொப்டர்கள் முக்கியமாக விமானிகளுக்கான பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படுவதுடன் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த வேளைகளில்...

சேதமடைந்த தெரு மின்விளக்கு அமைப்பை புனரமைக்க 1.09 பில்லியன் ரூபா திட்டம்

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்கு அமைப்பைப் புனரமைப்பதற்காக ரூ. 1.09 பில்லியன் ஒதுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தொடர்ச்சியான நாசகரவேலைகள் மற்றும் செப்புக் கம்பி வடங்கள், பிற மின்சார பாகங்கள் திருடப்பட்டதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள விளக்கு அமைப்பு கடுமையாகச் சிதைந்துள்ளது. இதன் விளைவாக, அதிவேக நெடுஞ்சாலையின் விளக்கு அமைப்பில் கிட்டத்தட்ட...

எரிபொருள் விலையினால் பேருந்து கட்டணம் அதிகரிக்குமா ;அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தின்படியே பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்படுகின்றன என்றும், அண்மையில் திருத்தப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எரிபொருள் விலைகள்...

தனிநபருக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு ரூ. 17,117 ஆக பதிவு!

இலங்கையில் தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு, விகிதத்தை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்திற்கான திணைக்களத்தின் அறிக்கையில் தனிநபர் மாதாந்தச் செலவு ரூ. 17,117 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மார்ச் மாதத்தின் செலவீனத்துடன் ஒப்பிடுகையில் 427 ரூபாய் அதிகரித்துள்ளதாக திணைக்களம்...

நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்து வரும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம்!

விலை அதிகரிப்புக்குப் பிறகும், ஒவ்வொரு லீட்டர் எரிபொருளிலும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். டீசலின் விலை ரூ. 536 ஆக காணப்படுகிற நிலையில் ரூ. 407-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் ரூ. 29 இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல் சுமார் 60 ரூபாவிற்கும் மேற்பட்ட இழப்பில் விற்பனை செய்யப்படுகிறது...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...