Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

அமெரிக்க தூதுவருடன் பிரதமர் சந்திப்பு : கல்வி மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படையணி (Peace Corps) கல்வி மற்றும் கலாசார பரிமாற்றத் திட்டம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தூதுவர் விளக்கமளித்தார். மேலும்,...

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து திட்டம்!

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இலங்கை போக்குவரத்து சபையும் அறிவித்துள்ளன. திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்த சூழ்நிலைகளில், பரீட்சார்த்திகள் தங்களின் பரீட்சை நிலையங்களுக்கு இடையூறு இல்லாமல் செல்லுவதற்கு தேவையான...

யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு!

யால தேசிய பூங்காவின் கோனகன் ஆர பகுதியில் பொலிஸார் நடத்திய நான்கு நாள் விசேட சுற்றிவளைப்பின் போது, பெரும் அளவிலான மூன்று கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, அந்தப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டன. இந்த சட்டவிரோதப் பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட்ட சரணாலயப்...

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

57வது அகவையை எட்டிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (24) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1968 நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்றார். 1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் சேர்ந்த...

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் மரம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு ஏற்பட்ட துயரமான விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார். பெரிய மரம் ஒன்று சாலையோரத்தில் சரிந்து, பயணித்த முச்சக்கர வண்டியின் மீது வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இரண்டரை வயது குழந்தை, 48 வயதான பெண், 57 வயதான...

பேருந்து கட்டணம் அட்டையின் மூலம் செலுத்தும் முறைமை இன்று முதல் அமுலுக்கு!

பேருந்துப் பயணக் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள கொட்டாவ – மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்த திட்டம் இன்று உத்தியோகப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையேற்க உள்ளார். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன்...

இன்றைய நாளுக்கான வானிலை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

நாடு முழுவதிலும் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல்...

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்தப் பணவீக்கம் (Year-on-Year) 2025 ஒக்டோபர் மாதத்தில் 2.7% ஆக உயர்ந்துள்ளது. இது 2025 செப்டெம்பர் மாதத்தில் பதிவான 2.1% பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கான மொத்தப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...