Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு…!

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர்...

மட்டுப்படுத்தப்படும் நீர் விநியோகம்…!

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக...

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு  விளக்கமறியல் ….!

கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் நேற்று (27.09) உத்தரவிட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடமையில்...

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி கெரட், போஞ்சி, கோவா, வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சி 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கெரட் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் கோவா 220 ரூபாவிற்கும், ஒரு...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை...

இறைவரி திணைக்களத்தால் காலக்கெடு..!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதைத் தவறினால் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்டரீதியான அபராதம் மற்றும் வட்டி செலுத்துதலை எதிர்கொள்ள நேரிடும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். எந்தவொரு வரிக்கான...

கூகுள் இணையதளத்தை எச்சரித்த ட்ரம்ப்..!

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 'Donald Trump presidential race 2024.' என தேடினால் மோசமான விடயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் தகவல் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப்...

விபத்துக்குள்ளாகிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து…!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – பதுளை பிரதான வீதியின் பெலிஹுல் ஓயா பகுதியில் நேற்று (27.09) பிற்பகல் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பக்கவாட்டில் உள்ள அணையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ் சாரதி மற்றும் மூன்று பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள 4000 வாகனங்கள்…!

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27.09) ஆரம்பித்துள்ளது. இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் கட்சியில் இணைய நாமல் அழைப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் அக்கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மறுசீரமைத்து, திறமையான...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...