Tuesday, July 7, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்….!

அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இன்று (21.09) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,...

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை…!

எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு..!

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் ஆணையர் எம்.ஏ.பி.சி. பெரேரா தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது...

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன்; மைத்திரி…!

எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தல்களிற்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலிற்கான செலவு மாத்திரம் பத்து பில்லியன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

உலங்கு வானூர்தி மூலம் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பெட்டிகள்…!

இன்று சனிக்கிழமை (21.09) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்கு வானூர்தி வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது. நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தி மூலம்  வருகை தந்த சிரேஷ்ட தேர்தல் அலுவலர்களையும் விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்...

மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார்; அனுர…!

அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க  எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பொதுமக்கள் அமைதியை பேணவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் மக்களால் அவரின் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என  எதிர்பார்க்கின்றேன் என அனுரகுமார...

நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்கள்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21.09) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் 75 வீதம் முதல் 80 வீதம் வரையிலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில...

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்…!

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வெளியாகும் தேர்தல் முடிவு…!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21.09) ஆம் திகதி சுதந்திரமாகவும் அமைதியாகவும் நிறைவடைந்துள்ளது. இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் முதலாவது தேர்தல் முடிவு இன்று நள்ளிரவில் வெளியாகும் என...

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க..!

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...