Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழில் தேர்தல் குறித்து இதுவரை 45 முறைப்பாடுகள் பதிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்தும் வன்செயல்கள் அல்லது வன்முறைகள் அற்ற சட்ட மீறல்களாகவே காணப்படுகிறது. தேர்தல் குறித்தானமுறைப்பாடுகளை பதிவு செய்வதற்குரிய தொலைபேசி...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. இன்று காலை தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவுசெய்யும்...

முல்லைத்தீவில் தீவிர வாக்களிப்பு…!

முல்லைத்தீவில் 9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர்...

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க…!

2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாக்க கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை (21.09) தனது வாக்கை அளித்தார்.

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்-ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில்.

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. காலையில் சற்று...

வவுனியாவில் வாக்களிப்பு ஆரம்பம்- களத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்கள்..!

ஜனாதிபதி தேர்தல் 2024ற்கான வாக்களிப்புக்கள் இன்று நாடு முழுவதும் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவிலும் காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் இதேவேளை அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வவுனியா தேர்தல் ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டு வருவதுடன் ஐரோப்பிய ஓன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீவிர வாக்களிப்பில் ஈடுபடும் பெருந்தோட்ட மக்கள்…!  

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21.09) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை செலுத்திக்கொண்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில்  6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா-மஸ்கெலியா...

இரவு 11.00 மணிக்குள் தேர்தலின் முதலாவது முடிவு..!

நாட்டின் 9வது ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21)  இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள் பெரும்பாலும் முதலில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தபால் வாக்குகள் எண்ணும்...

முதல் சுற்றிலேயே ரணில் வெற்றிபெறுவார்!!

முதல் சுற்றிலேயே ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார். ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை முதலாவது நபராக பதிவுசெய்திருந்தார். அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச….!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை வாக்களித்துள்ளார்.
- Advertisement -

Latest News

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு...