Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ரணில் பக்கம் பாயும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்..!

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்றையதினம் (15) தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ  விமலவீர, தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோர்   கண்டியில் நடைபெற்ற "ரணிலால் இயலும்"...

அதிகரித்துள்ள பொருளாதார வளர்ச்சி வீதம்..!

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி 4.7 வீதம் அதிகரித்துள்ளதாக  மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடும் போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில்...

 மக்களுக்கு பணம் வழங்கியவர் கைது..!

ஜனாதிபதி வேட்பாளரை ஊக்குவிப்பதற்காக அருகில் வசிப்பவர்களுக்கு தலா 5000 ரூபாவை விநியோகித்ததாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கிண்ணியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நபரொருவரின் வீட்டில் சந்தேகநபர் பணம் விநியோகித்ததாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை வருகை….!

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் , 22 பேர் பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்கள் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து 6 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் நாட்களில், மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ஆசிய வலையமைப்பு பிரதிநிதிகள்...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள்…!

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி…!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிலியந்தலை...

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்கு செலுத்துபவர்களுக்கு அபராதம்….!

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா...

மஹியங்கனை, தம்பராவ பகுதியில் விபத்து; நால்வர் படுகாயம்…!

மஹியங்கனை, தம்பராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை தம்பராவ விகாரைக்கு அருகாமையில் காரும் முச்சக்கரவண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், நால்வர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொடை – எல்பிட்டிய வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பலாங்கொடை - எல்பிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியவிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள...
- Advertisement -

Latest News

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு...