Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி…!

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையிலுள்ள அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் ஆன்மீக வழிகாட்டலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து மதங்களுக்கிடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் அப்போஸ்தலிக்க ஆயர் பதவிப் பட்டமளிப்பு விழாவில்...

மன்னாரில் அரச மருந்து கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்க முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான  முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுதாபனத்தின் கிளையை மன்னாரில்...

சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை…!

சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையவழி நிதி மோசடிகளின் அதிகரிப்புக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனச் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். அண்மைய நாட்களில் நாடு முழுவதும் இணையவழியில் நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு அச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ள விசேட அறிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் இறுதியில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார். மேலும் அரசாங்கத்தில் பொறுப்புகளில் இருந்துகொண்டு, பிற தரப்புகளுடன் தொடர்புபட்டு செயற்பட்ட 7 பேர் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 4 பேர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று...

இளைஞர்களுக்கு கல்வியே சிறகுகள்; ரணில் விக்ரமசிங்க…!

ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ஆங்கிலக் கல்வி வழங்க வேண்டும் என்று வெள்ளை அறிக்கையை கொண்டு வந்தபோது ஜே.வி.பி அதனை எதிர்த்ததால் இலங்கையில் பெருமளவிலான இளைஞர்கள் ஆங்கிலக் கல்வியை இழந்ததாகவும்,இளைஞர்களுக்கு சிறகுகளை வழங்கும்போது ஜே.வி.பி. அவர்களின் கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டு இளைஞர்களுக்கு கல்வியே சிறகுகள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,சிறகுகள் இருந்தால்...

மனைவி இரும்பு கம்பியால் தாக்கியதில் கணவன் பலி…!

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை கொன்றுள்ளார். தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடகம்மெத்த, கோமகொட பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன்,  சந்தேகநபரான மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானைக்குட்டியை மீட்கும் பணி தீவிரம்…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புளிய முனை கிராமத்தில் உள்ள கிணற்றில் வீழ்ந்த யானைக்குட்டியை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புளிய முனை கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில்...

பாடசாலைகளுக்கு இடையிலான “Band” இசை போட்டி…!

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான band இசை போட்டியானது இராணுவத்தின் 54 காலாட்படையின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை (07.09) இடம் பெற்றது. குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தகைமையின் அடிப்படையிலும் பிரிவுகளிலும் போட்டிகள் இடம் பெற்றது. போட்டிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மன்/புனித...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்…!

உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (07.09) கொழும்பில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில்...

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி ரவையுடன் கைது…!

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (08.09) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்திவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச.இன்பராசா என்ற 22 வயதுடைய மீனவத் தொழில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிரான் கோரகல்லிமடு...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...